2025-ம் ஆண்டில் இதுவரை...டாப் 7 இந்திய பிளாக்பஸ்டர் படங்கள்
இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் பிளாக்பஸ்டர் ஆன டாப் 7 படங்களை தற்போது காண்போம்.;
சென்னை,
வரலாற்று படங்கள் முதல் நகைச்சுவை, திரில்லர் படங்கள் வரை, 2025-ம் ஆண்டில் பல வகையான படங்கள் இந்திய பாக்ஸ் ஆபீஸில் புயலை ஏற்ப்டுத்தி இருக்கிறது. அந்தவகையில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் பிளாக்பஸ்டர் ஆன டாப் 7 படங்களை தற்போது காண்போம்.
சாவா
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக திரைப்படம் 'சாவா'. இந்த படம் இந்தியாவில் ரூ.604.1 கோடி வசூலித்து, பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றி பெற்றது.
ஹவுஸ்புல் 5
பாலிவுட் நடிகர் அக்சய் குமார் - இயக்குனர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திரைப்படம் "ஹவுஸ் புல் 5" . இப்படம் ரூ.218.33 கோடி வசூலித்தது.
எல்2: எம்புரான்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான அரசியல் திரில்லர் படம் எல்2: எம்புரான். இப்படம் ரூ.123.25 கோடி வசூலித்தது.
சித்தாரே ஜமீன் பர்
இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான், ஜெனிலியா நடிப்பில் உருவான படம் 'சித்தாரே ஜமீன் பர்'. இத்திரைப்படம் ரூ.195 கோடி வசூலித்தது.
சங்கராந்திகி வஸ்துன்னம்
அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இந்த படம் ரூ.186.7 கோடி வசூலித்தது.
குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் ரூ.180.75 கோடி வசூலித்தது.
ரெய்டு 2
ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிரைம் திரில்லர் படம் 'ரெய்டு 2'. இது ரூ. 173.44 கோடி வசூலை பெற்றது.