டோவினோ தாமஸின் “அதிரடி” பட டீசர் வெளியீடு

பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.;

Update:2025-10-18 18:06 IST

பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான படப்பிடிப்பு விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் பாசில் ஜோசப், டோவினா தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாசில் ஜோசப் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றியடைந்த ‘லோகா’ படத்தில் டோவினோ தாமஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்

இந்நிலையில், பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்