"வதந்தி 2" வெப் தொடரின் படப்பிடிப்பு அப்டேட்

நடிகை அபர்ணா தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.;

Update:2025-08-12 12:14 IST

கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் 'வதந்தி'. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து வதந்தி தொடரின் 2ம் பாகத்தை இயக்கி வருகின்றனர். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து பீஸ்ட், டாடா போன்ற படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில், நடிகை அபர்ணா தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை அபர்ணா தாஸ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்