'வாரிசு' இயக்குனரின் அடுத்த படம்: சல்மான் கான் உள்ளே...அமீர்கான் வெளியே?

கடந்த இரண்டு வருடங்களாக, வம்சி பைடிபள்ளி, அமீர் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.;

Update:2025-10-17 15:10 IST

சென்னை,

’சிதாரே ஜமீன் பர்' படத்திற்கு பிறகு அமீர் கான், தற்போது பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் 'தாதாசாகேப் பால்கே' வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு தயாராகி வருகிறார். '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகிய மெகா பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறது.

இதற்கிடையில், கடந்த இரண்டு வருடங்களாக, வம்சி பைடிபள்ளி, அமீர் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக, வம்சியின் கதை அமீரை மிகவும் கவர்ந்ததாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இருப்பினும், சமீபத்திய தகவல்கள் அமீர்கான், வம்சி பைடிபள்ளியின் படத்தில் நடிக்கவில்லை என்று கூறுகிறது. வம்சி பைடிபள்ளி இப்போது அதே ஸ்கிரிப்ட்டுடன் சல்மான் கானை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்