சல்மான் கானின் 'சிக்கந்தர்' படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகை அஞ்சினி

கடந்த ஆண்டு வெளியான 'பின்னி அண்ட் பேமிலி' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சினி;

Update:2025-02-08 10:29 IST

மும்பை,

சஞ்சய் திப்பாதி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பின்னி அண்ட் பேமிலி'. இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சினி. இவர் நடிகர் வருண் தவானின் உறவினரும் கூட. இவர் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் நடிப்பதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வந்தன.

இந்நிலையில், நடிகை அஞ்சினி 'சிக்கந்தர்' படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'"நான் சல்மான் கானின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் நடிப்பது கனவில் உள்ளதுபோல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் படத்தின் செட்டுக்குள் நுழையும்போது, இது நிஜமா அல்லது கனவு காண்கிறேனா? என ஒவ்வொரு நாளும் என்னை நானே கிள்ளிக் கொள்வேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்