பழம்பெரும் நடிகை பெருமாயி காலமானார்

நடிகை பெருமாயின் மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;

Update:2025-05-04 15:13 IST

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி (வயது 73). இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'தெற்கத்தி பொண்ணு' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் விஜய்யின் 'வில்லு', சிவகார்த்திகேயனின் 'எதிர்நீச்சல்' என 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், பெருமாயி கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்று இவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்