திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-03-27 07:30 IST

திருவண்ணாமலை,

கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்து கொண்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்