ஒரே நாளில் 2 பாடல்களை வெளியிடும் விஜய் ஆண்டனி..!
சக்தித் திருமகன் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இன்று விஜய் ஆண்டனி வெளியிட உள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மார்கன்' என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சக்தித் திருமகன் படத்திலிருந்து 2 பாடல்கள் இன்று விஜய் ஆண்டனி வெளியிட உள்ளார். அதாவது, விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்துள்ள இப்படத்தின் 'மாறுதோ' பாடல் இன்று காலை 11 மணிக்கும், 'ஜில் ஜில் ஜில்' என்ற பாடல் மாலை 6 மணிக்கும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.