விஜய் ஆண்டனியின் 26-வது படத்தின் அப்டேட்
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது முழு நேர நடிகராகி விட்டார். ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தாமதமாகியுள்ளன
இந்நிலையில் அவரது 26-ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. .ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.