''சக்தித் திருமகன்''...ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய் ஆண்டனி

இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.;

Update:2025-08-12 21:28 IST

சென்னை,

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ''சக்தித் திருமகன்'' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு தெலுங்கில் 'பத்ரகாளி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்