'மகாராஜா' பட கிளைமாக்ஸ்: 'உண்மையாகவே காயம்...ஒரு கையில் தவழ்ந்து' - விஜய் சேதுபதி

'மகாராஜா' படத்தில் நடிக்க விஜய் சேதுபதி எவ்வாறு உதவினார் என்பதை இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.;

Update:2025-05-21 18:11 IST

சென்னை,

தனது மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டபோது, 'மகாராஜா' படத்தில் நடிக்க விஜய் சேதுபதி எவ்வாறு உதவினார் என்பதை இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், அனுராக் காஷ்யபின் அந்த கருத்து பெருந்தன்மையை காட்டுவதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

"அவர் அப்படி சொல்வது அவருடைய பெருந்தன்மை. செல்வம் கதாபாத்திரத்திற்காக சென்னையில் சிலரை அணுகினோம், ஆனால் அது பலனளிக்கவில்லை. பிறகு, ஏன் அனுராக் காஷ்யப்பை அணுகக்கூடாது என நினைத்தோம். நாங்கள் அவரிடம் கேட்டபோது, உடனே ஒப்புக்கொண்டார்.

'மகாராஜா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது, அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஒரு இயக்குனரும் என்பதால், சூழ்நிலையை புரிந்துக்கொண்டு நடித்துக்கொடுத்தார்.

அவர், 'கவலைப்படாதே, நான் ஒரு கையில் தவழ்ந்து செல்கிறேன். இது இன்னும் உண்மையானதாக இருக்கும்' என்றார்' என்று கூறினார்.

விஜய் சேதுபதி, ஆறுமுக குமார் இயக்கத்தில் தனது அடுத்த படமான 'ஏஸ்' படத்தின் ரிலீஸுக்கு தயாராகி வருகிறார். இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்