'ஆர்யன்' படத்தைப் பார்த்தால் நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்- செல்வராகவன்

விஷ்ணு விஷால் நடித்துள்ள இப்படம் வருகிற 31ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-10-27 07:35 IST

சென்னை,

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் மானசா சவுத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகின்றன.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட செல்வராகவன், ஆர்யன் படம் குறித்து பேசியுள்ளார். அதில், "ஆர்யன் படத்தைப் பார்த்து நீங்க நிச்சயம் ஏமாற மாட்டீங்க. ஒரு சில படங்களை பார்த்தலே நமக்கு படம் பாத்தி தெரிஞ்சுடும். இந்த படத்தின் கதை புதுசு. விஷ்ணு விஷால் நல்லா நடிச்சிருக்காரு. எனக்கு படத்தில் அதிக காட்சிகள் இல்ல, ஆனால் விஷ்ணு விஷால் நடிக்கிற விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு." என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்