விமலின் 'கலாட்டா பேமிலி '...’வாடி பொண்டாட்டி’ பாடல் வெளியீடு

சற்குணம் இயக்கத்தில் விமல் நடிக்கும் 'கலாட்டா பேமிலி 'படத்தின் முதல் பாடல் வெளியானது.;

Update:2025-11-30 08:44 IST

சென்னை,

'கலாட்டா பேமிலி 'முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விமல் 'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்திருந்தார்.

விலங்கு வெப் தொடரை அடுத்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று 'கலாட்டா பேமிலி '. சற்குணம் இயக்கி இருக்கும் இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ’வாடி பொண்டாட்டி’ என்ற இப்பாடலை நரேஷ் ஐயர் மற்றும் மதுரா ஆகியோர் பாடியுள்ளனர்.

மறுபிறம், ‘மகாசேனா’ என்ற படத்திலும் விமல் நடித்து வருகிறார். சிருஷ்டி மற்றும் யோகி பாபு ஆகியோர் இதில் முதன்மை கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்