’வாரணாசி’ படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்ட மகேஷ் பாபு

தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இடைவெளி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-11-30 09:15 IST

சென்னை,

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான வாரணாசியின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மகேஷ் பாபு, தற்போது படப்பிடிப்பிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளார்.

தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இடைவெளி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல வாரங்களாக தொடர்ச்சியான படப்பிடிப்புக்குப் பிறகு, இந்த சிறிய இடைவெளி மகேஷ் பாபுவுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம்‘வாரணாசி’. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருந்தது. இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

மேலும், 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும், ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜும் நடித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்