ஷிவாத்மிகாவின் “ஆரோமலே”...ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.;

Update:2025-12-10 16:55 IST

சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த மாதம் 7ம் தேதி வெளிவந்த படம் ‘ஆரோமலே’. சாரங் தியாகு பிரபல நடிகர் தியாகுவின் மகன் ஆவார்.கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘ஆரோமலே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்