ரூ.1,000 கோடி நஷ்டம் அடைந்த படம்...இப்போது ஓடிடியில் - எதில் பார்க்கலாம்?

இப்படம் அக்டோபர் 10-ம் தேதி அன்று தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.;

Update:2025-12-01 20:06 IST

''டிரான்'' படத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகமான டிரான்: ஏரிஸ் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் தோல்வியை சந்தித்தது.

ஜோச்சிம் ரோனிங் இயக்கிய இந்த படத்தில் ஜாரெட் லெட்டோ, ஜெப் பிரிட்ஜஸ், இவான் பீட்டர்ஸ், கிரேட்டா லீ, கேமரூன் மோனகன், சாரா டெஸ்ஜார்டின்ஸ், கில்லியன் ஆண்டர்சன், ஜேசன் டிரெம்ப்ளே, ஜோடி டர்னர்-ஸ்மித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் அக்டோபர் 10-ம் தேதி அன்று தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்திஒயில் வெளியான இப்படம் ரூ.1000 கோடி நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

வேறு எந்த டிஸ்னி படத்தையும் விட மோசமாக தோல்வியை இப்படம் அடைந்திருக்கிறது. இந்நிலையில், திரையரங்குகளில் தோல்வியடைந்த இப்படம் தற்போது ஓடிடிக்கு வர உள்ளது. அதன்படி, இப்படம் நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்