நேரடியாக ஓடிடியில்... 30 மொழிகளில் வெளியாகும் படம் - எதில், எப்போது பார்க்கலாம்?

நிதான்ஷி கோயல் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.;

Update:2025-12-05 19:40 IST

சென்னை,

ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்த ’மிடில் கிளாஸ் மெலடிஸ்’, கோவிட் தொற்றுநோய் காலத்தில் நேரடியாக பிரைம் வீடியோவில் வெளியானது. வினோத் அனந்தோஜு இயக்கிய இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் அந்த கூட்டணி ’தக்சகுடு’ என்ற படத்திற்காக இணைந்துள்ளது. மிடில் கிளாஸ் மெலடீஸைப் போலவே, தகசுகுடுவும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. சமீபத்தில், தகசுகுடுவின் தயாரிப்பாளர் நாக வம்சி, டிஜிட்டல் ரிலீஸை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், "சில படங்கள் தியேட்டரில் பார்க்கும் படி உருவாக்கப்படும். சிலது ஓடிடியில் வெளியாக ஏற்றவை. நெட்பிளிக்ஸ் தகசுகுடு படத்தை பல நாடுகளில் 30 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. படத்தின் கதை அதிக பார்வையாளர்களை ஈர்க்கும், எனவே நாங்கள் தியேட்டரில் வெளியிடவில்லை" என்றார்

லாபட்டா லேடீஸ் பட புகழ் நிதான்ஷி கோயல் இந்த படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். தகசுகுடு படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமா இணைந்து தயாரிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்