ஓடிடியில் வெளியாகும் யாமி கவுதமின் ’ஹக்’...எதில், எப்போது பார்க்கலாம்?
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது;
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி மற்றும் நடிகை யாமி கவுதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஹக் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. சுபர்ண் வர்மா இயக்கிய இந்த படம் ஜனவரி 2 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது, ஆனால் பாக்ஸ் ஆபீஸில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது ஓடிடியில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது.
இந்த படத்தில் ஷீபா சத்தா, டேனிஷ் ஹுசைன், வர்த்திகா சிங், பரிதி ஷர்மா, எஸ்.எம். ஜாகீர், அசீம் ஹட்டங்கடி, ராகுல் மித்ரா மற்றும் அனங் தேசாய் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் மிஸ்ரா இசையமைத்துள்ளார்.