ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...’மௌக்லி 2025’ படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

இதில் ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார்.;

Update:2025-12-28 16:40 IST

’கலர் போட்டோ’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் சந்தீப் ராஜ், சமீபத்தில் ’மௌக்லி 2025’ என்ற மற்றொரு காதல் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் பபிள்கம் மூலம் தனது திறமையை நிரூபித்த ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார். சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இதில், சரோஜ் குமார் வில்லனாகவும், விவா ஹர்ஷா, கிருஷ்ண பகவான், மௌனிகா ரெட்டி மற்றும் பலர் துணை வேடங்களிலும் நடித்தனர். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற பதாகையின் கீழ் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் இந்த படத்தை தயாரித்தனர். கால பைரவா இசையமைத்தார்..

கடந்த 13-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, மௌக்லி 2025 ஜனவரி 1 முதல் ஈடிவி வின்-ல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்