தியேட்டரில் ஹிட் கொடுத்த மும்முட்டியின் படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
மம்முட்டி வில்லன் கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.;
மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கொலை செய்யும் வில்லன் கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார். அவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் திரையரங்குகளில் ஹிட் கொடுத்து தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்து.