ஓடிடியில் சாந்தினி சவுத்ரியின் புது படம்...எதில், எப்போது பார்க்கலாம்?

இப்படத்தை சஞ்சீவ் ரெட்டி இயக்கி இருந்தார்.;

Update:2025-12-19 18:46 IST

சென்னை,

விக்ராந்த் மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்த சமீபத்திய தெலுங்கு காதல்-நகைச்சுவை திரைப்படம் 'சந்தான பிராப்திரஸ்து' . சஞ்சீவ் ரெட்டி இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பார்வையாளர்கள் இந்த திரைப்படத்தை அவர்கள் விரும்பும் தளத்தில் பார்க்கலாம்.

மதுரா என்டர்டெயின்மென்ட் மற்றும் நிர்வி ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மதுரா ஸ்ரீதர் ரெட்டி மற்றும் நிர்வி ஹரிபிரசாத் ரெட்டி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும், இப்படத்தில் தருண் பாஸ்கர், அபினவ் கோமதம், முரளிதர் கவுட் மற்றும் வெண்ணெலா கிஷோர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சுனில் காஷ்யப் இசையமைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்