ஓடிடியில் வெளியாகும் சந்தீப் பிரதீப்பின் ’எகோ’...எதில், எப்போது பார்க்கலாம்?
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது;
சென்னை,
’கிஷ்கிந்தா காண்டம்’ பட இயக்குனர் தின்ஜித் அய்யாதன் இயக்கிய படம் ’எகோ’ . இதில், ’படக்கலம்’ படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் சந்தீப் பிரதீப் நடித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் அசோகன், பியானா மோமின், என்.ஜி. ஹங் ஷென், சிம் ஸி பீ, சாஹிர் முகமது மற்றும் ரஞ்சித் சேகர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
இப்படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியானது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 31-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.