ஓடிடிக்கு வரும் ஜான்வி கபூரின் காதல் படம்...எதில், எப்போது பார்க்கலாம்?

இத்திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ளார்.;

Update:2025-10-08 19:01 IST

சென்னை,

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பரம் சுந்தரி. இத்திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகி உள்ளது. அதன்படி, வருகிற 10-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மடோக் பிலிம்ஸ் தயாரித்து துஷார் ஜலோட்டா இயக்கிய இந்தப் படத்தில் சஞ்சய் கபூர், தன்வி ராம், ரெஞ்சி பணிக்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்