ஓடிடிக்கு வரும் ‘ராஜு வெட்ஸ் ராம்பாய்’ - பிளாக்பஸ்டர் காதல் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?
இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் சைலு காம்பதி இயக்கியுள்ளார்.;
சமீபத்தில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ராஜு வெட்ஸ் ராம்பாய். அகில் ராஜ் உத்தேமாரி மற்றும் தேஜஸ்வி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் சைலு காம்பதி இயக்கியுள்ளார்.
ராஜு வெட்ஸ் ராம்பாய் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இந்த காதல் கதை வருகிற 18-ம் தேதி முதல் இடிவி வின்-ல் ஸ்டிரீமிங் ஆகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறியவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
ராஜு வெட்ஸ் ராம்பாய் படத்தில் சைது ஜொன்னலகட்டா வில்லனாகவும், சிவாஜி ராஜா மற்றும் அனிதா சௌத்ரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தோலாமுகி சபால்டர்ன் பிலிம்ஸ் பேனரின் கீழ் வேணு உடுகுலா தயாரித்துள்ளார். படத்தின் வெற்றியில் சுரேஷ் பொபிலியின் இசை முக்கிய பங்கு வகித்தது.