வெளியாகி 10 மாதங்களுக்கு பிறகு ஓடிடிக்கு வரும் மம்முட்டி படம் - எதில், எப்போது பார்க்கலாம்?
இந்த படத்தின் மூலம் கவுதம் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமானார்.;
சென்னை,
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, திரில்லர் படமான டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் கவுதம் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பத்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் ஓடிடி-யில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில், இறுதியாக ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற 19 முதல் ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
மம்முட்டி தயாரித்த இதில் கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், விஜி வெங்கடேஷ், சித்திக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.