பாலிவுட் வெப் தொடரின் தெலுங்கு ரீமேக்கில் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் கடைசியாக கண்ணப்பா படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
பாலிவுட்டின் பிரபலமான திரில்லர் வெப் தொடர் 'ஆர்யா'. சுஷ்மிதா சென் நடித்த இந்தத் தொடர் இதுவரை 3 சீசன்களைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது தெலுங்கில் 'விசாகா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது. சமீபத்தில், 'ஜியோ ஹாட் ஸ்டார்' 'சவுத் பவுண்ட்' என்ற பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்து இதை அறிவித்தது.
இந்தத் தொடரில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. காஜல் அகர்வால் கடைசியாக கண்ணப்பா படத்தில் நடித்திருந்தார்.