ஓடிடியில் வெளியாகும் ''ஓஹோ எந்தன் பேபி'' படம்... எங்கு, எப்போது பார்க்கலாம்?

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.;

Update:2025-08-04 08:37 IST

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இதில் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்களிடையேநல்ல வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்