"தி ராஜா சாப்" படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எதில், எப்போது பார்க்கலாம்?

பிரபாஸின் "தி ராஜா சாப்" பட ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.;

Update:2026-01-27 13:55 IST

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ந் தேதி வெளியான படம் ‘தி ராஜாசாப்’. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் மாருதி இயக்கிய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகளின் தரம், ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்