ஓடிடியில் யாமினியின் ’சைக் சித்தார்த்தா ’...எதில், எப்போது பார்க்கலாம்?
இப்படத்தில் யாமினி பாஸ்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
நந்து மற்றும் யாமினி பாஸ்கர் நடித்த “சைக் சித்தார்த்தா” திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. அதன்படி, இந்த படம் பிப்ரவரி 4 முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘சைக் சித்தார்த்தா’. வருண் ரெட்டி இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தை ஷ்யாம் சுந்தர் ரெட்டி தயாரித்துள்ளார்.
இப்படத்தில் யாமினி பாஸ்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், நரசிம்ம.எஸ், பிரியங்கா ரெபேக்கா ஸ்ரீனிவாஸ், சுகேஷ், வடேகர் நரசிங், பாபி ரத்தகொண்டா, சாக்சி அத்ரி சதுர்வேதி, மௌனிகா, டியூம்னா பில்லூரி ஆகியோர் மற்ற வேடங்களில் நடித்தனர்.
சாம்ரான் சாய் இசையமைக்க, கே. பிரகாஷ் ரெட்டி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். கடந்த 1-ம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.