கார்த்திகை சோமவார விழா.. திருவரங்குளம் அரங்குலநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனித நீரால் சிவபெருமான், பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-11-17 15:49 IST

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரங்குலநாதர் பெரியநாயகி அம்பாள் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா இன்று நடைபெற்றது.

சோமவார விழாவை முன்னிட்டு கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாளை எழுந்தருளச் செய்தனர். பின்னர், சிவாச்சாரியார்கள் யாக பூஜை செய்து, லிங்க வடிவில் நெல் தானியத்தை பரப்பி, அதில் 1008 சங்குகளை அடுக்கி புனித நீரை நிரப்பி, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பூஜைக்கு பின்னர் சங்குகளில் உள்ள புனித நீரை எடுத்துச் சென்று மூலஸ்தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமான், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பூஜை நிறைவுபெற்றதும் கருப்புசாமி திருமண மண்டபத்தில் கத்தக்குறிச்சி கண்டுவார் மண்டகப்படிதார்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்