அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்: 6-ம் தேதி தொடங்குகிறது

பிரம்மோற்சவத்தையொட்டி ஜூன் 3-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது.;

Update:2025-06-01 11:49 IST

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவத்தையொட்டி 3-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணியும், 6-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 10-ந்தேதி மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை கல்யாண உற்சவம், 11-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 14-ந்தேதி தேரோட்டம், 15-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் பங்கேற்கலாம்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன வீதிஉலாக்கள் நடக்கின்றன. வாகன வீதிஉலா முன்னால் நாட்டியம், நடனம், இசை நிகழ்ச்சி, பக்தி பாடல், பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இது தவிர தினமும் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டம், அன்னமாச்சாரியார் திட்டம், தாச சாகித்ய திட்டம் ஆகியவை சார்பில் பக்தி கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்