சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி
தசாவதார நிகழ்ச்சியில் ஜெனகை நாராயண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 12-ம் தேதி வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து யாதவர் சமூகத்தினர் சார்பாக தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் ஜெனகை நாராயண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.