விடுமுறை தினம்: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
நேற்று மொத்தம் 87,347 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று வரை விடுமுறை தினமாக இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் இலவச தரிசனத்திற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், ஏழுமலையானை வழிபட சுமார் 24 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகியவை போன்ற அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
நேற்று மொத்தம் 87,347 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 39,490 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.13 கோடியாகும். ரூ. 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.