திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் மூலவர் ஏழுமலையானுக்கு சங்கராச்சாரியார் ‘வெண்சாமர’ சேவை செய்தார்.;

Update:2025-11-17 11:45 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதியோடு வந்து நேற்று சாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வந்த சங்கராச்சாரியாரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர் கோவில் மரியாதையுடன் வரவேற்றனர்.

கோவிலுக்குள் சென்ற சங்கராச்சாரியார் மூலவர் ஏழுமலையானுக்கு ‘வெண்சாமர’ சேவை (விசிறி கைங்கர்யம்) செய்தார். சங்கராச்சாரியாருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினா்.

சாமி தரிசனத்தின்போது தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, கோவில் துணை அதிகாரி லோகநாதன், பார்பதீடர் ராமகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்