திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.;

Update:2025-11-23 08:57 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

Advertising
Advertising

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கிடையில் 7-ம் நாள் விழாவான 30-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 3-ந் தேதி (10-ம் நாள் விழா) மாலையில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்