திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பௌர்ணமி கருடசேவை

அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மலையப்பசாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2025-11-06 11:26 IST

தெலுங்கு கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக்கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடந்தது. அதையொட்டி பலவண்ண மலர்களாலும், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மலையப்பசாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

வாகன வீதி உலாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்