பிரான்மலை சன்னாசி கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.;

Update:2025-06-13 15:32 IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம், பிரான் மலையில் ஐந்து கோவில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கலியுக மெய் அய்யனார் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான ஸ்ரீ சன்னாசி சுவாமி ஜெய வீர ஆஞ்சநேயர், நீலகண்ட நாயனார் சுவாமிகளுக்கு புதிய கோவில் கட்டி கும்பாபிஷேக விழா நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் புதிய கோவில் கட்டப்பட்டு திருப்பணி வேலை விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.

அதனை தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் ஆசியுடன் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. யாக பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை வேளார் வம்சாவளி பூஜகர்கள், பிரான்மலை 3 கரை வேளார் பங்காளிகள், திருப்பணி குழுவினர் சுமந்துகொண்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு சென்றனர்.

அங்கு காலை 10.20 மணியளவில் வானில் கருடன் வட்டமிட, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் சன்னாசி சுவாமி ஜெய வீர ஆஞ்சநேயர், திருநீலகண்ட நாயனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்கள் காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து கிராம கோவில்களில் இருந்து சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டன. பின்னர் அனைவருக்கும் தலை வாழை இலை போட்டு அன்னதானம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்