புரட்டாசி கடைசி சனிக்கிழமை; திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் நேற்று 74,468 பேர் தரிசனம் செய்தனர். 26,878 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவுக்கு பிறகும்கூட்டம் அதிகரித்து வருகிறது.புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் கடந்த 3- வாரங்களாக பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு வந்து சென்றனர்.புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையான இன்று காலை முதலே தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. மலை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் நேற்று 74,468 பேர் தரிசனம் செய்தனர். 26,878 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.