முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கொடை விழா 11-ம் தேதி ஆரம்பம்

கொடை விழாவின் இரண்டாம் நாளான 12-ம் தேதி காலையில் ஹோமங்கள், பூஜைகளைத் தொடர்ந்து சிறப்பு கலசாபிஷேகம் நடைபெறுகிறது.;

Update:2025-08-08 12:07 IST

முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் ஆடி கொடைவிழா வருகிற 11-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாளில் காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.00 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் மதியம் 3 மணிக்கு மாகாப்பு அலங்காரமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்குபூஜையும் இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது

இரண்டாம் நாளான 12-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணி ஹோமங்கள் மற்றும் பூஜைகள், 8 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு சித்திரா அன்னம், மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு உச்சிகால பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 1.15 மணிக்கு அன்னதானம், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு பூப்படைப்பு , 12 மணி ஊட்டு படைப்பு, இரவு 1 மணிக்கு பூக்குழி இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்