திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.34 கோடி
திருப்பதயில் நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 284 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 268 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.