திருச்சூரில் நாளை பூரம் திருவிழா - தெற்கு கோபுர நடையை திறந்து வைத்த யானை
திருச்சூர் பூரம் திருவிழா விளம்பர நிகழ்வு இன்று நடைபெற்றது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பூரம் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பூரம் திருவிழா மே 6-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு பூரம் திருவிழா விளம்பர நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்படி காலை 8 மணியளவில், செண்டை மேளம் முழங்க எர்ணாகுளம் சிவக்குமார் என்ற யானை நைத்தலக்காவு பகவதி சிலையுடன் தெற்கு கோபுர நடையை திறந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.