சீர்காழி: ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் யாக பூஜையைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2026-01-20 16:39 IST

சீர்காழி தென்னங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் தை மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் யாக குண்டம் அமைத்து யாக பூஜைகள் செய்யப்பட்டன. வேள்வியில் பழங்கள், மூலிகை பொருட்கள் சமர்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீபாலா விநாயகர், ஸ்ரீபாலா மாரியம்மன், ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமிக்கு மஞ்சள் தூள், அரிசி மாவு, மூலிகை திரவிய பொடி, தேன், நல்லெணணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்