தேய்பிறை அஷ்டமி.. பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

சீர்காழி சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-11-12 14:12 IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள், திரவிய பொடி பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தாடிக்கொம்பு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், பன்னீர், திருமஞ்சனம் உட்பட16 வகையான அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்