இந்த ஆலயத்தில் வழிபட்டால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும்

பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவியருடன் காட்சி தருகிறார்.;

Update:2025-09-18 14:08 IST

தஞ்சை மாவட்டம் திருச்சேறையில் அமைந்துள்ளது சாரநாதப் பெருமாள் திருக்கோவில். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே, இத்தலத்தின் நாயகர், சாரநாதப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் இத்தலம் திருச்சாரம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பெயர் மருவி, திருச்சேறை என ஆனது.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இத்தலத்தில் மட்டும்தான் பெருமாள் ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். அதாவது, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என ஐந்து தேவியருடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள சாரநாதப் பெருமாளை வழிபட்டால் பாவங்கள் விலகும். இத்த பெருமாளை வழிபட்டால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

Tags:    

மேலும் செய்திகள்