தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று பிற்பகலிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவிற்கு ரூ.2 ஆயிரம் பிற்பகலில் உயர்ந்துள்ளது.;

Update:2025-10-13 09:35 IST

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. கிடுகிடுவென அதிகரிப்பதும், பின்னர் சற்று சரிவதும் என்ற நிலையிலேயே பயணிக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 2 முறை விலை மாற்றத்தையும் சந்திக்கிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்து இருந்தது. இதேபோல் பிற்பகலில் கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் அதிகரித்து இருந்தது. ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில வாரங்களாக தினமும் இருமுறை தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது. இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், பிற்பகலில் ரூ.440 உயர்ந்துள்ளது இதன்படி, ஒரு பவுன் ரூ.640 உயர்ந்து ரூ.92,460 க்கு விற்பனையாகிறது.   இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 

தங்கம் விலையை காட்டிலும், வெள்ளி விலைதான் பந்தயத்தில் வேகமாக முன்னேறுகிறது. இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு  வந்தது. பிற்பகலில் மேலும் 2 ஆயிரம் உயர்ந்தது. இதன்படி ஒரு கிலோ வெள்ளி  ரூ.1 லட்சத்து 97 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.7 ஆயிரம் உயர்ந்துள்ளது. 

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

13.10.2025 ஒரு சவரன் ரூ.92,200 (இன்று)

11.10.2025 ஒரு சவரன் ரூ.92,000 (நேற்று முன்தினம்)

10.10.2025 ஒரு சவரன் ரூ.90,720

09.10.2025 ஒரு சவரன் ரூ.91,400

08.10.2025 ஒரு சவரன் ரூ.91,080

07.10.2025 ஒரு சவரன் ரூ.89,600

Tags:    

மேலும் செய்திகள்