தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.;
கோப்புப்படம்
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 22-ந்தேதி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்தது.
மேலும் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுநாளே சவரனுக்கு ரூ.2, 200 ஏறிய வேகத்திலேயே சரிந்தது. 24-ந்தேதியும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.