சென்னை ஐகோர்ட்டில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

28 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2025-12-15 10:40 IST

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நிர்வாக ரீதியிலான பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களை சென்னை ஐகோர்ட்டு ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்புகிறது. காலியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு,தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது 28 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: சென்னை ஐகோர்ட்டு

காலி பணி இடங்கள்: 28

பதவி: ஆராய்ச்சி சட்ட உதவியாளர்

பணி புரியும் இடம்: சென்னை அல்லது மதுரை

கல்வி தகுதி: சட்டப்படிப்பு படித்தவர்கள். இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது: 15-12-2025 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதி தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-12-2025

இணையதள முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment/login

Tags:    

மேலும் செய்திகள்