டிஎன்பிஎஸ்சி குரூப்-4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
அறிவிப்பு வெளியிட்ட போது 3,935 காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.;
சென்னை,
ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இந்த கலந்தாய்வு 18-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மேலும், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அறிவிப்பு வெளியிட்ட போது 3,935 காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் 727, 645 இடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 12 இடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், நகராட்சி நிர்வாகம், வேளாண் துறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்திருக்கிறது.