நெல்லை மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை: 15 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க
21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.;
நெல்லை,
நெல்லை மாவட்டத்தின் கீழ் இயங்கும் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 15 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.3,000/- என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட (ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 Level of Pay - ரூ.3000-9000)) தகுதியான பெண்விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் கட்டாயம் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி, விதவை / கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமைகள் கோருவதற்கான சான்றுகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். நியமனம் கோரும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி / குக்கிராமம் /வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுச் சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, சாதி மற்றும் விதவை / கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு 14.01.2026 பிற்பகல் 05.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) 14.01.2026 பிற்பகல் 05.45 மணிக்குப் பின் நேரிலோ, பதிவஞ்சலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்புக் கடிதம் பின்னர் அனுப்பப்படும். நேர்காணலுக்கு வரும்பொழுது அசல் நேர்காணல் அழைப்புக் கடிதம் மற்றும் அசல் சான்றுகள் தவறாது எடுத்து வரவேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tirunelveli.nic.in/notice_category/recruitment/