மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு அறிவிப்பு

தேர்வானது அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.;

Update:2025-12-10 20:34 IST

சென்னை,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் கீழ்காணும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

1 வடசென்னை

2 அம்பத்தூர்

3 கோயம்புத்தூர்

4 திருப்பூர்

5 கடலூர்

6 திருச்சிராப்பள்ளி

7 நாகப்பட்டினம்

8 திண்டுக்கல்

9 மதுரை

10 சேலம்

11 ஈரோடு

12 தஞ்சாவூர்

13 திருநெல்வேலி

14 நாகர்கோவில்

15 ஓசூர்

16 உளுந்தூர்பேட்டை

17 செங்கல்பட்டு

18 திருவண்ணாமலை

19 விருதுநகர்

20 வேலூர்

21 நாமக்கல்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்